டெக்சாசில் நடந்த டெஸ்லா கார் விபத்துக்கு ஆட்டோபைலட் சிஸ்டம் காரணம் அல்ல என டெஸ்லா விளக்கம் அளித்துள்ளது.
கடந்த 17 ஆம் தேதி நடந்த இந்த விபத்தில் 2 பேர் கொல்லபட்டனர். டிரைவர் இல்லாத டெஸ்லா எஸ் மாடல் மின்சார காரில் ஆட்டோபைலட் முறை தோல்வி அடைந்ததே இந்த விபத்துக்கு காரணம் என கூறப்பட்டது.
ஆனால் விபத்து நடந்த நேரத்தில் ஆட்டோபைலட் முறை செயலில் இருக்கவில்லை எனவும், யாரோ ஒரு நபர் அந்த வாகனத்தை இயக்கியதே விபத்துக்கு காரணம் எனவும் தான் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளதாக டெஸ்லா தலைவர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
விபத்துக்குள்ளான காரை ஆய்வு செய்ததில், அதன் ஸ்டியரிங் சக்கரம் சேதமடைந்தது உறுதியானதால், யாரோ அந்த டிரைவர் இல்லா காரை இயக்கி விபத்தை ஏற்படுத்தி உள்ளனர் எனவும் டெஸ்லா அதிகாரிகள் தெரிவித்தனர்.