அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தை சேர்ந்த கிறிஸ்டினா ரியான் என்ற பெண், குட்டி டைனோசரை பார்த்ததாக கூறி வெளியிட்ட வீடியோவால் இணையத்தில் பெரிய விவாதமே நடைபெறுகிறது.
அதிகாலை 3 மணி அளவில் போதிய வெளிச்சம் இல்லாத குடியிருப்பு பகுதியில், ஒரு விலங்கு ஓடிச் செல்லும் 5 வினாடி சிசிடிவி காட்சி வெளியாகி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது. நீண்ட வாலுடன் ஓடும் அந்த விலங்கை பார்ப்பதற்கு குட்டி டைனோசர் போன்று உள்ளது.
இந்த வீடியோவைப் பார்த்து நெட்டிசன்கள் கருத்துகளை தெறிக்கவிட்டு வருகின்றனர். சிலர் அந்த விலங்கு நாய் அல்லது நரியாக இருக்கலாம் என்று கருத்து பதிவிட்டுள்ளனர். வேறு சிலரோ ஜூராசிக் பார்க்கிற்கு வரவேற்கிறோம் என்று நக்கலடித்துள்ளனர்.