இந்தோனேஷியாவின் நீர்மூழ்கிக் கப்பல் 53 பேருடன் மாயமானது. 44 ஆண்டுகள் பழமையான ஜெர்மானிய தயாரிப்பான இந்த நீர்மூழ்கிக் கப்பலுக்கு கே ஆர் ஐ நங்காலா 402 என இந்தோனேஷிய அரசு பெயரிட்டிருந்தது.
நேற்று பாலி தீவுகளுக்கு அருகே பயிற்சியில் ஈடுபட்டிருந்ததாகக் கூறப்பட்ட நிலையில், திடீரென நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து எந்த சமிக்ஞையும் பெறப்படவில்லை. இதையடுத்து அந்தக் கப்பல் பயிற்சியில் ஈடுபட்ட இடத்தில் மேலும் இரு போர்க்கப்பல்கள் மூலம் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.
மாயமான அந்த நீர்மூழ்கிக் கப்பலில் 53 ஊழியர்கள் இருந்ததாகக் கூறப்படும் நிலையில் தேடுதல் வேட்டையில் சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலிய நாடுகளும் இறங்கியுள்ளன.