ஜெர்மனியில் மீண்டும் கொரொனா கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டதை கண்டித்து பெர்லினில் திரண்ட ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் வெடித்தது.
கொரோனா பரவல் அதிகரித்த போதும் 16 மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படாததால் அதிபர் ஏஞ்செல்லா மெர்கெல் ((Angela Merkel)) இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தார்.
அதனைக் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர். போலீசார் மீது பாட்டில்களை வீசிய 7 பேர் கைது செய்யப்பட்டனர்.