பாகிஸ்தானில் போராட்டக்காரர்களால் பிணை கைதிகளாக பிடிக்கப்பட்ட11 போலீசார் விடுவிக்கப்பட்டனர்.
பிரான்ஸ் பத்திரிக்கை ஒன்றில் வெளியான கேலி சித்திரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தானிலுள்ள தெஹ்ரிக் -இ- லப்பைக் (ehreek-e-Labbaik) அமைப்பு சார்பில் நடத்தப்பட்ட போராட்டத்தில் வன்முறை வெடித்தது.
இதனையடுத்து அந்த அமைப்பை தடை செய்த பாகிஸ்தான் அரசு, அதன் தலைவரை கைது செய்தது. இதனால் ஆத்திரமடைந்த தெஹ்ரிக் -இ- லப்பைக் ஆதரவாளர்கள், லாகூரில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதுடன், 11 போலீசாரை பிணை கைதிகளாக பிடித்தனர்.
தொடர்ந்து பாகிஸ்தான் அரசு நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின் 11 போலீசாரும் விடுவிக்கப்பட்டனர்.