பிரேசிலில், நிவாரணப் பொருட்களை வாங்க அதிகாலை 3 மணி முதலே மக்கள் நீண்ட வரிசையில் காத்துக்கிடந்தனர்.
கொரோனா பெருந்தொற்றால், சா பவுலோ நகர குடிசைப் பகுதிகளில் வசிக்கும் ஏராளமானோர் வேலை இழந்தனர்.
அதிகரிக்கும் கடன் சுமை காரணமாக ஏழைகளுக்கு வழங்கப்பட்ட கொரோனா நிவாரணத் தொகையை அரசு பாதியாகக் குறைத்ததால், அன்றாட உணவிற்கே அல்லல் படும் நிலைக்கு பலர் தள்ளப்பட்டனர்.
தொண்டு நிறுவனங்கள் வழங்கும் உணவுப் பொருட்களை ஒருவேளை மட்டுமே உண்டு அவர்கள் நாட்களை கடத்தி வருகின்றனர்.