சிறையில் உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்சி நவல்னி உடல் நலிவுற்றுள்ளதால் எந்த நேரத்திலும் இறக்கக் கூடும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
ரஷ்யாவில் புடின் அரசைக் கடுமையாக விமர்சித்து வரும் அலெக்சி நவல்னிக்கு இரண்டரை ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி மாதம் முதல் சிறையில் உள்ள அவர், தனக்கு முதுகுவலி, கழுத்து வலிக்குச் சிகிச்சை அளிக்கப்படவில்லை எனக் கூறி மார்ச் 31 முதல் உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
அவரது உடல்நிலையைக் கவனித்து வரும் மருத்துவர்கள், அவர் உண்ணாநோன்பால் உடல் நலிவுற்ற அவர் எந்த நேரத்திலும் மாரடைப்பால் இறக்கக் கூடும் எனத் தெரிவித்துள்ளனர்.