’எரியக்கூடிய பனி’ என அழைக்கப்படக்கூடிய மீத்தேன் ஹைட்ரேட்டில் இருந்து இயற்கை எரிவாயுவை சீனா உற்பத்தி செய்து வருகிறது.
தண்ணீர் படிகங்களுக்கு இடையே மீத்தேன் இருப்பதாகவும், இது சீனாவுக்கு புதிய எரிவாயு ஆதாரமாக விளங்கும் என்றும் கூறப்படுகிறது.
கடந்த 2017 மற்றும் 2020ஆம் ஆண்டுகளில் தென் சீனக்கடலில் சோதனை ரீதியில் மீத்தேன் ஹைட்ரேட்டிலிருந்து இயற்கை எரிவாயு உற்பத்தி செய்து உலக நாடுகளை சீனா திகைக்க வைத்தது.
இந்நிலையில் ஷென்சென் நிறுவனத்தின் முயற்சியால் புதிய உபகரணங்கள் மற்றும் இயந்திரங்கள் மூலம் கடலில் துளையிட்டு மீத்தேன் ஹைட்ரேட்டில் இருந்து இயற்கை எரிவாயு எடுக்கும் பணியில் சீனா தீவிரமாக ஈடுபட்டுள்ளது.