ரஷ்ய எல்லையையொட்டி, விண்ணில் பறந்த அமெரிக்காவின் உளவு விமானம் நடுவழியில் தடுத்து நிறுத்தப்பட்டு, திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது.
Kamchatka என்ற துறைமுக நகர் அருகே பசிபிக் பெருங் கடல் மீது அமெரிக்காவின் போயிங் R.C.135 ஏன்ற அதி நவீன உளவு விமானம் பறந்து சென்றது.
நடுவானில் இந்த விமானத்தை ரஷியாவின் மிக் 31 ரக ஜெட் போர் விமானம் வழிமறித்து தடுத்து நிறுத்தியதாக அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதேநேரம், தங்கள் நாட்டு எல்லைக்குள் அமெரிக்க உளவு விமானம் நுழையவில்லை என ரஷியா அறிவித்துள்ளது.