கொரோனாவின் பிடியில் சிக்கித்தவிக்கும் பிரேசிலில் மயக்க மருந்து பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதாக அந்நாட்டு சுகாதாரத்துறையினர் தெரிவிக்கின்றனர்.
உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் ஒன்று பிரேசில். அங்கு ஒரு கோடியே 37 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 3 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் ரியோ டி ஜெனிரோ மற்றும் சாவ் பாலோ நகரிலுள்ள மருத்துவமனைகளில் அத்தியாவசிய மருந்துகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக நோயாளிகளுக்கு வழங்கப்படும் மயக்க மருந்துக்கு கடும் பற்றாக்குறை நிலவுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.