கென்யாவில் வெள்ளத்தில் சிக்கித் தவித்த ஒட்டகச் சிவிங்கியும், அதனுடைய குட்டியும் பத்திரமாக மீட்கப்பட்டன.
பாரிங்கோ ஏரியில் ஏற்பட்ட வெள்ளத்தினால் நகாரிகோனி மற்றும் நோயல் என்று பெயரிடப்பட்ட தாய், சேய் ஒட்டகச் சிவிங்கிகள் சிக்கி வெளியேற முடியாமல் தவித்தன. இதுகுறித்து தகவலறிந்த கென்ய வனத்துறையினர், மயக்க ஊசி மூலம் இரு ஒட்டகச் சிவிங்கிகளையும் பிடித்தனர்.
பின்னர் அவற்றின் கண்களை மூடி, பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட படகு மூலம் மேடான பகுதிக்கு கொண்டு சென்றனர். தொடர்ந்து தாயும், சேயும் பத்திரமாக விடுவிக்கப்பட்டனர்.