இதற்கு முன் இல்லாத, அதிகபட்ச அளவிற்கு யுரேனியத்தை செறிவூட்ட ஈரான் முடிவு செய்துள்ளது. ஈரானில் திங்களன்று பூமிக்கு அடியில் உள்ள நடன்ஸ் அணுசக்தி ஆய்வகத்தில் தாக்குதல் நடத்தப்பட்டதற்கு, இஸ்ரேல் தான் காரணம் என்று ஈரான் குற்றம்சாட்டி இருந்தது.
இதனால் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் உடனான அணுசக்தி ஒப்பந்தப் பேச்சுவார்த்தை பாதிக்கப்படும் என்று ஈரான் வெளியுறவு அமைச்சர் தெரிவித்திருந்தார். தேவைப்பட்டால் 60 சதவீத அளவிற்கு யூரேனியம் செறிவூட்டப்படும் என்று ஈரான் தலைவர் அயத்துல்லா அலி காமேனி எச்சரித்திருந்தார். அதனை உறுதிப்படுத்தும் விதமாக ஈரான் அதிகாரியான அப்பாஸ் அரக்சி, தற்போது அதிகபட்ச அளவிற்கு யூரேனியம் செறிவூட்டப்பட இருப்பதாக கூறியுள்ளார்.