இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவரும், இளவரசருமான பிலிப் வடிவமைத்த லேண்ட் ரோவர் வைத்து அவரது இறுதி ஊர்வலம் நடைபெறுமென அறிவிக்கப்பட்டு உள்ளது.
99 வயதான எடின்பரோ கோமகன் பிலிப், கடந்த வெள்ளிக்கிழமை காலமானார். அவரின் இறுதிச்சடங்கு வரும் 17-ம் தேதி நடைபெற உள்ளது. கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் காரணமாக மிக நெருக்கமான குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே இறுதிச்சடங்கில் கலந்து கொள்கின்றனர்.
இந்த நிலையில், 15 ஆண்டுகளுக்கு முன் இளவரசர் பிலிப் வடிவமைக்க உதவிய லேண்ட் ரோவர் வாகனத்தில் வைத்தே அவரது சவப்பெட்டி 8 நிமிடம் பயணித்து இறுதிச் சடங்கு நடைபெறும் வின்சர் கோட்டையை அடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.