ஆஸ்திரேலியாவை தாக்கிய சூறாவளியால் ஏற்பட்ட இழப்புகளை அதிகாரிகள் கணக்கெடுத்து வருகின்றனர். செரோஜா புயலை முன்னிட்டு கடற்கரையை ஒட்டி அமைந்துள்ள கல்பாரி (Kalbarri) நகரில் கன மழை பெய்தது.
அப்போது வீசிய சூறை காற்றால் அப்பகுதியில் உள்ள 70 சதவீத கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஏராளமான மின் கம்பங்கள் சாய்ந்ததால் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கும் கல்பாரி நகரம் இருளில் மூழ்கியது.