ஜப்பானில் மூத்த குடிமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் இன்று முதல் தொடங்கியது.
டோக்கியோவின் ஹச்சியோஜி (Hachioji ) நகரில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசி முகாமில் திரண்ட முதியவர்கள் பைசர் தடுப்பூசியை ஆர்வத்துடன் போட்டுக்கொண்டனர்.
ஜூன் மாத இறுதிக்குள் ஜப்பானில் வசிக்கும் 3 கோடியே 60 லட்சம் முதியர்களுக்கும் தடுப்பூசி போடப்படும் என அமைச்சரவை செயலாளர் கட்சுனோபு கட்டோ (Katsunobu Kato) தெரிவித்துள்ளார்.
முன்னதாக ஜப்பானில் சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.