லண்டனில் பாஃப்டா (BAFTA) விருதுகள் வழங்கும் விழா காணொலி வாயிலாக நடைபெற்றது. நோமாட் லேண்ட் சிறந்த படமாக விருதைத் தட்டிச் சென்றது. ஆன்டனி ஹாப்கின்ஸ் சிறந்த நடிகராகவும் தேர்வு செய்யப்பட்டார்.
BAFTA எனப்படும் பிரிட்டிஷ் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கான விருது வழங்கும் விழா நேற்று காணொலி வாயிலாக நடைபெற்றது.
இந்த விழாவில் நோமாட்லேண்ட் என்ற அமெரிக்கப் படம் விருதுகளைக் குவித்து சிறந்த படமாகத் தேர்வு செய்யப்பட்டது. இப்படத்தை இயக்கிய சீன வம்சாவளியான இயக்குனர் கோலே ஜாவோ மற்றும் 63 வயதான நடிகை பிரான்சிஸ் டார்மண்ட் ஆகியோரும் விருதுகளைப் பெற்றனர்.
"Promising Young Woman" பிரிட்டனின் சிறந்த படத்திற்கான விருதைத் தட்டிச் சென்றது.
சிறந்த நடிகராக ஆன்டனி ஹாப்கின்ஸ் தேர்வு செய்யப்பட்டார். விருதைப் பெற்றுக் கொண்ட அவர் தாம் முதியவர் பாத்திரத்தில் நடிக்கவில்லை ஏனென்றால் தாம் இப்போது முதிய வயதை எட்டிவிட்டதாக நகையுணர்வுடன் குறிப்பிட்டார்.