சூயஸ் கால்வாயில் எவர்கிவன் சரக்குக் கப்பல் சிக்கியதன் காரணமாக ஏற்பட்ட இழப்புக்கு ஈடு செய்யாமல் கப்பலை விட மாட்டோம் என்று எகிப்து அதிகாரிகள் கூறுகின்றனர்.
இது தொடர்பான செட்டில்மென்ட்டுக்குப் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. ஒருவாரத்திற்கும் மேலாக சூயஸ் கால்வாயில் கப்பல் சிக்கியதால் 360க்கும் மேற்பட்ட கப்பல்கள் செல்ல வழியின்றி பெரும் வர்த்தக பாதிப்பு ஏற்பட்டது.
இதற்காக சுமார் ஒரு பில்லியன் டாலர் அளவுக்கு இழப்பீடு தொகை கோரப்பட்டுள்ளது. எனினும் சட்ட ரீதியாக வழக்காடாமல் சுமுகத் தீர்வு காண முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக எகிப்து கால்வாய் நிர்வாக அதிகாரிகள் தெரிவித்தனர்.