மகிந்திரா நிறுவனம் மின்சார வாகனத் தயாரிப்புத் தொழிலில் அடுத்த மூன்றாண்டுகளில் மூவாயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.
வாகனத் தயாரிப்புத் தொழிலில் உள்ள மகிந்திரா நிறுவனம், உலகின் பல நாடுகளில் உள்ள தனது தொழிற்சாலைகளில் உள்ள திறன்களை ஒருங்கிணைப்பதன் மூலம் மின்சாரக் கார் உற்பத்தி ஆலையை நிறுவத் திட்டமிட்டு வருகிறது.
கூட்டாகத் தொழில் நடத்த நிறுவனங்களை எதிர்பார்த்துள்ளதாகக் கூறப்படுகிறது. வாகனத் தொழில், பண்ணைச் சேவைகள் துறைகளில் அடுத்த ஐந்தாண்டுகளில் ஒன்பதாயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்ய உள்ளதாக ஏற்கெனவே அறிவித்திருந்தது.