தாய்லாந்தில் வெள்ளத்தில் சிக்கித் தவித்த 46 வயது துறவியை ஆழ்கடல் நீச்சல் வீரர்கள் போராடி மீட்டனர். துறவி ஒருவர் கடந்த வாரம், ஃப்ரா சைங்கம் குகைக்குள் தவமிருக்கச் சென்றார்.
கடந்த 3 நாட்கள் தொடர்ந்து பெய்த மழையால் குகைக்குள் வெள்ளம் புகுந்தது. துறவி ஒருவர் உள்ளே சிக்கி கொண்டிருப்பதாக அப்பகுதி மக்கள் தகவல் அளித்ததை தொடர்ந்து, மீட்பு குழுவைச் சேர்ந்த 17 வீரர்கள் குகைக்குள் நீந்திச் சென்று அவரை பத்திரமாக வெளியே கொண்டு வந்தனர்.