அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்திலுள்ள டம்பா பே குளத்தில் ஏற்பட்ட நச்சு கழிவுநீர் கசிவால் அப்பகுதியில் வசிக்கும் நூற்றுக்கணக்கானோர் வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
பாஸ்பேட் ஆலையிலிருந்து வெளியேறிய பாஸ்பரஸ் (phosphorous), நைட்ரஜன் (nitrogen) கலந்த நீர், 77 ஏக்கர் பரப்பளவிலான நீர்த்தேக்கத்தில் கலந்தது.
அந்த நீர் தேக்கத்தின் சுற்றுசுவரில் ஏற்பட்ட கசிவால் அதிக அளவிலான கழிவுநீர் வெளியேறுகிறது. அப்பகுதியில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டு, அங்கு வசிப்போர் அனைவரும் வீட்டைவிட்டு வெளியேறுமாறு குறுந்தகவல் மூலம் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.