பிரேசிலில் கொரோனாவால் இறந்தவர்களை அடக்கம் செய்ய இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், பழைய கல்லறைகளை சுத்தம் செய்து புதிய உடல்களை அடக்கம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.
பிரேசிலில் தினமும் 75 ஆயிரத்திற்கு அதிகம் பேருக்கு தொற்று ஏற்பட்டு, நாளொன்றுக்கு 3 ஆயிரத்து 800 க்கும் மேற்பட்டோர் உயிரிழக்கின்றனர்.
பிரேசிலின் மிகப்பெரிய நகரமான சாவோ பவுலோ நகரில் கொரோனாவால் இறந்தவர்களை அடக்கம் செய்ய கல்லறைத் தோட்டங்களில் இடமில்லை.
எனவே ஏற்கனவே இருக்கும் கல்லறைகளை திறந்து அவற்றில் இருக்கும் மனித எச்சங்களை அகற்றி விட்டு புதிய உடல்களை அங்கு புதைக்கின்றனர்.