சூயஸ் கால்வாயை அடைத்துக் கொண்டிருந்த பிரம்மாண்ட கன்டெய்னர் கப்பலான எவர் கிவன் அங்கிருந்து அகன்ற பிறகு, அங்கு வழக்கமான கப்பல் போக்குவரத்து துவங்கியது.
இரு மார்க்கத்திலும் இன்று காலை சூயஸ் கால்வாய் வழியாக 113 கப்பல்கள் கடந்து சென்றன. கடந்த ஒரு வாரகாலமாக போக வழியின்றி சிக்கி நின்ற 422 கப்பல்களும் 3 அல்லது 4 நாட்களில் சூயஸ் கால்வாயை கடந்து செல்லும் என சூயஸ் கால்வாய் ஆணையத்தின் தலைவர் ஒசாமா ராபி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.