எகிப்தின் சூயஸ் கால்வாயில் சிக்கியுள்ள கப்பலை மீட்பதற்கு வேறு திட்டங்களை யோசிக்குமாறு எகிப்து அதிபர் உத்தரவிட்டுள்ளார்.
தைவான் நிறுவனத்திற்குச் சொந்தமான எவர் கிவன் என்ற சரக்குக் கப்பல் சூயல் கால்வாயைக் கடக்கும் போது புயலில் சிக்கி கால்வாயின் குறுக்கே சிக்கிக் கொண்டது. இதனால் சுமார் 300க்கும் மேற்பட்ட கப்பல்கள் இருபுறமும் சிக்கிக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் இழுவைக் கப்பல் மூலம் எவர் கிவன் கப்பலை இழுக்கும் முயற்சிகள் நடந்து வந்தாலும் காற்றின் வேகம் காரணமாக தோல்வியடைந்து வருகின்றன.
இதையடுத்து கப்பலில் உள்ள 18 ஆயிரம் கண்டெய்னர்களை இறக்கி கப்பலை இழுக்கும் முயற்சிக்கு நீண்ட நாட்கள் ஆகலாம் என்று கூறப்படுகிறது. இதையடுத்து மாற்று வழியை யோசித்து விரைந்து செயல்படுமாறு சூயஸ் கால்வாய் ஆணையத்திற்கு எகிப்து அதிபர் அப்துல் பத்தா அல் சிசி உத்தரவிட்டுள்ளார்.