எகிப்து நாட்டின் சூயஸ் கால்வாயில் எவர்கிவன் கப்பல் சிக்கியதால் 237 கப்பல்கள் நடுக்கடலில் நிற்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
400 மீட்டர் நீளமும், 2 லட்சத்து 24 ஆயிரம் டன் எடையும் கொண்ட எவர் கிவன் என்ற கப்பல் எகிப்தின் சூயல் கால்வாயைக் கடக்க முயன்றபோது குறுக்கே சிக்கிக் கொண்டது.
இதனையடுத்து கப்பலை விடுவிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்த நிலையில் கப்பலில் பணியாற்றுபவர்களில் 24 பேர் இந்தியர்கள் என்பதும் அவர்கள் அனைவரும் பத்திரமாக இருப்பதாகவும் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனிடையே சூயஸ் கால்வாயைக் கடக்க முடியாமல் 237 கப்பல்கள் நிற்பதாகக் கூறப்படுகிறது.
உலகளவில் ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகம் முடங்கியுள்ளது. குறிப்பாக உலகளவில் கச்சா எண்ணெய் விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கச்சா எண்ணெய் விலை 4 விழுக்காடு வரை உயர்ந்துள்ளது.