எறும்புக் கூட்டம் ஒன்று தங்கத்தாலான பிரேஸ்லெட்டை ஒன்று கூடி களவாடிச் செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 50க்கும் மேற்பட்ட எறும்புகள் ஒன்று சேர்ந்து பிரேஸ்லெட்டை அலேக்காகத் தூக்கிச் செல்கின்றன.
இந்த வீடியோ எங்கு, எப்போது எடுக்கப்பட்டது என்று தெரியாவிட்டாலும், இனிப்பு தடவப்பட்டிருந்தால் பிரேஸ்லெட்டை தூக்கிச் செல்ல வாய்ப்பிருப்பதாகவும், உலகின் மிகச் சிறிய திருடர்கள் இவர்கள்தான் என்றும் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.