சீன பல்கலைக்கழகங்களில் படித்துவிட்டு தாயகம் திரும்பிய இந்திய மாணவர்கள் மீண்டும் வர அனுமதிக்கப்பட மாட்டார்கள் என சீனா தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்றின் எதிரொலியாக சர்வதேச விமான போக்குவரத்துக்கு தடை நீடிப்பதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக சீன அரசு தெரிவித்துள்ளது.
அதற்குப் பதிலாக அங்கு படித்துவந்த இந்திய மாணவர்கள் தங்களது பல்கலைக்கழகங்களிடம் தொடர்பு வைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
சுமார் 23 ஆயிரம் இந்திய மாணவர்கள் சீன பல்கலைக்கழகங்களில் படித்து வந்தனர்.