வங்கதேசத்தில் உள்ள ரோஹிங்கியா அகதிகள் முகாமில் பெரும் தீ விபத்து நேரிட்டது.
அந்நாட்டின் தெற்குப் பகுதியில் உள்ள காக்ஸ் பஜார் மாவட்டத்தில் பலுகாலி என்ற இடத்தில் ரோஹிங்கியா முஸ்லீம்களுக்கு முகாம் அமைக்கப்பட்டுள்ளது.
இதில் தீப்பிடித்ததில் நூற்றுக்கணக்கான கூடாரங்கள் எரிந்து சேதம் அடைந்தன.
மலைப்பாங்கான பகுதியில் இந்த முகாம் அமைக்கப்பட்டிருந்ததாலும், அருகில் நீர் நிலைகள் இல்லாததாலும் நெருப்பை அணைப்பதில் தாமதம் ஏற்பட்டது.
தீயணைப்புப் படையினர் பல மணி நேர போராட்டத்திற்குப் பின் நெருப்பை அணைத்தனர். இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்ததாகக் கூறப்படும் நிலையில் அதுபற்றிய தகவல் அறிவிக்கப்படவில்லை.