ஆப்பிரிக்க நாடான நைஜரில் மர்ம மனிதர்கள் நடத்திய தாக்குதலில் 40 பேர் கொல்லப்பட்டனர்.
அண்டை நாடான மாலியின் எல்லைக்கருகே அமைந்துள்ள தஹோவா மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.
ஆயுதம் ஏந்திய சிலர் இருசக்கர வாகனங்களில் வந்து தாக்குதல் நடத்தியதாகவும், இதில் 40 பேர் வரை உயிரிழந்ததாகவும் நைஜர் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்தக் குழுவும் பொறுப்பேற்கவில்லை என்று கூறிய அவர், மற்றொரு நாடான சஹேல் பகுதியில் உள்ள ஆயுதக் குழுக்கள் மீது சந்தேகம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.