ஜப்பானில் கொரோனா தாக்கம் தணிந்து,ஊரடங்கு தளர்த்தப்பட்டு உள்ள சூழலில், பூத்து குலுங்கும் செர்ரி மலர்களை காணும் பேருந்து சுற்றுலா மீண்டும் துவங்கி உள்ளது.
ஜப்பானில், ஆண்டுதோறும் மார்ச் மாதம் செர்பி மலர்கள் பூத்து குலுங்குவது வழக்கம். அந்த வகையில், இந்தாண்டு, கண்களுக்கு விருந்து படைக்கும் வகையில் செர்ரி மலர்கள், பெருமளவில் பூத்து காட்சி அளிக்கிறது.
கொரோனா ஊரடங்கு காலத்தில் வீட்டில் இருந்து பணியாற்றி வந்த பலரும் செர்ரி மலர்களின் அழகை ரசித்து மகிழும் பேருந்து சுற்றுலா பயண சேவைக்கு, வரவேற்பு தெரிவித்துள்ளனர்.