வரும் திங்கட்கிழமை முதல் கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை படிப்படியாக தளர்த்த கிரீஸ் நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
அதன்படி, திங்கட்கிழமை முதல் தொல்பொருள் தளங்கள், முடி திருத்தும் நிலையம் ஆகியவை திறக்கப்படும் என அறிவித்துள்ள அந்நாடு, இம்மாத இறுதி முதல் மருந்து கடைகளில் தனிநபர்களுக்கு கொரோனாவிற்கான ரேபிட் பரிசோதனைகள் இலவசமாக மேற்கொள்ளப்படும் என்றும் அறிவித்துள்ளது.
மேலும், வார இறுதி நாட்களில் மட்டும் 2 மணிநேரம் தாமதமாக இரவு 11 மணிக்கு இரவு நேர ஊரடங்கு தொடங்கும் என அந்நாடு அறிவித்துள்ளது.