கொரோனா பரிசோதனை நெகட்டிவாக காட்டிய போதும் கொரோனா பரவியிருக்கலாம் என்று பாரீசில் நடைபெற்ற புதிய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
கொரோனா பரவியதன் அத்தனை அறிகுறிகளும் இருந்த நோயாளிகளுக்கு ஸ்வாப் எனப்படும் சளிமாதிரி சோதனை எடுத்த போது, நெகட்டிவ் எனக் காட்டியது.
ஆனால், மரபணு சோதனை மூலம் கொரோனா இருப்பதை விஞ்ஞானிகள் உறுதி செய்தனர். ஸ்வாப் பரிசோதனையில் கண்டறிய முடியாததால், இது புதிய வகை கொரானோ தொற்று என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
பிரிட்டானி பிராந்தியத்தில் 76 பேருக்கு கொரோனா ஏற்பட்டதில், எட்டு பேருக்கு புதிய வகை தொற்று உறுதி செய்யப்பட்டது.