அதிபர் தேர்தலில் தம்மை தோற்கடிக்க முயன்றவர் என்றும் கொலையாளி என்றும் ரஷ்ய அதிபரை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் விமர்சித்ததை தொடர்ந்து இரு தரப்புக்கும் இடையே அரசியல் மோதல் ஏற்பட்டுள்ளது.
ரஷ்யாவில் எதிர்க்கட்சித் தலைவரையே விஷம் வைத்துக் கொல்ல புதின் முயற்சித்தார் என்று பேட்டி ஒன்றில் அதிபர் பைடன் கூறினார்.
அத்துடன், முன்னாள் அதிபர் டிரம்புடன் சேர்ந்து சதி செய்து அதிபர் தேர்தலில் ஜோ பைடனை தோற்கடிக்க புதின் திட்டமிட்டார் என்ற பரபரப்பு குற்றச்சாட்டை அமெரிக்க உளவுத் துறை வெளியிட்டது.
இதன் எதிரொலியாக அமெரிக்காவுக்கான தனது தூதர் அனடோலி ஆன்டனோவை மாஸ்கோ திரும்புமாறு அதிபர் புதின் உத்தரவிட்டுள்ளார்.