அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்திலுள்ள விலங்கியல் பூங்காவில் பசியோடு இருந்த முதலை ஒன்று சிறுவர்களை விழுங்க முயற்சிக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளது.
மியாமியில் உள்ள விலங்கியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டுவரும் முதலையை இரு சிறுவர்கள் கண்ணாடி சுரங்கத்துக்குள் சென்று பார்த்துக்கொண்டிருந்தனர்.
அப்போது அங்கிருந்த முதலை சிறுவர்களை தனக்கான இரை என நினைத்து பாய்ந்துவந்து விழுங்க முயற்சிக்கிறது. இடையில் கண்ணாடி இருப்பதை இறுதியில் அறிந்த முதலை இரை கிடைக்காமல் ஏமாந்து போனது.