ஐஸ்லாந்து நாட்டில் கடந்த 20 நாள்களில் மட்டும் 40 ஆயிரம் நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டின் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
எரிமலைகளால் சூழப்பட்ட இந்த நாட்டில் அண்மைக்காலமாக தொடர்ந்து நில அதிர்வுகள் உணரப்பட்டடு வருகிறது.
வழக்கத்திற்கு மாறாக குறுகிய காலத்தில் அதிக அளவில் நில அதிர்வுகள் பதிவாகி இருப்பது அந்நாட்டு மக்களை அச்சமடையச் செய்துள்ளது.
நில அதிர்வுகளின் காரணமாக எரிமலைகளில் வெடிப்பு ஏற்பட வாய்ப்பிருப்பதாக அவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.