அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு நன்றாக தூங்க வேண்டுமென விரும்பினால் தொடக்கத்திலிருந்தே தங்களை சீண்டாமல் இருப்பது நல்லது என அமெரிக்க அதிபர் பைடனுக்கு வடகொரிய அதிபரின் சகோதரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்க நட்பு நாடுகளுடன் ராணுவ ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், அணு ஆயுத ஆயுதங்கள் மற்றும் சீனாவுக்கு எதிராக அணி திரட்டவும் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் ஆசிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுவருகிறார்.
இந்நிலையில் தங்கள் நிலத்தில் துப்பாக்கி வாசனையை பரப்ப போராடும் அமெரிக்காவின் புதிய நிர்வாகத்திற்கு அறிவுறை என்று கூறி மிரட்டல் தொனியில் பேசியுள்ளார்.