இந்தியாவில் அம்மன் கோவில்களில் நடத்தப்படும் தீமிதியை போன்று ஜப்பானில் உள்ள மலை கிராமமான டகோவா- விலும் தீமிதி திருவிழா நடத்தப்பட்டது.
ஆண்டுதோறும் நடைபெறும் இந்த தீமிதி திருவிழா கொரோனா பரவலால் கடந்த ஆண்டு நடைபெறவில்லை. இந்த ஆண்டு கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளுடன் நடைபெற்றது.
கட்டைகள், குச்சிகள் ஆகியவற்றை எரித்த புத்த துறவிகள், பின்னர் அதனை தண்ணீர் கொண்டு அணைத்தனர். புகையுடன் எழுந்த அந்த சாம்பலில் மக்கள் நடந்து சென்று பிரார்த்தனை செய்தனர்.