சீனாவின் வடமேற்கு மாகாணமான shannxi ல் 90 வயது கணவரும் அவரது 87 வயது மனைவியும் ரோஜாப்பூ மூலம் தங்களின் அன்பை பரிமாறிக் கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற இந்த முதிய ஜோடி இந்த கால இளைஞர்களுக்கு சவால் விடும் வகையில் உடை, அலங்காரம் என அனைத்திலும் தங்களை வேறுபடுத்தி காட்டியது.