கடும் பனிப் பொழிவு காரணமாக அமெரிக்காவில் நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.
அமெரிக்காவின் மேற்கு பகுதியில் உள்ள வயோமிங் (WYOMING) மாகாணத்தில் கடுமையான பனிப் புயல் வீசி வருகிறது. தாறுமாறாக கொட்டி உள்ள பனியால் சாலைகளில் 2 முதல் 3 அடி உயரத்துக்கு பனி படர்ந்து உள்ளது.
மேலும் சூறாவளி காற்றும் வீசுவதால் வானிலை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து நெடுஞ்சாலைகள், மற்றும் விமான போக்குவரத்தை ரத்து செய்யும் நிலைக்கு மாகாண அரசு தள்ளப்பட்டு உள்ளது.
இதனால் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உள்ளூர் பயணிகள் பாதிக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.