லண்டனில் காவல்துறை அதிகாரி ஒருவரால் கடத்தி கொல்லப்பட்ட சாரா எவரார்டுக்கு அஞ்சலி செலுத்த ஏராளமான மக்கள் அவரது நினைவிடத்தில் திரண்டனர்.
சாரா எவரார்டு என்ற பெண் கடந்த 3 ஆம் தேதி லண்டனில் காணாமல்போனார். அவரது உடல் கடந்த புதன்கிழமை சடலமாக கண்டெடுக்கப்பட்டது. விசாரணையில் வெய்ன் காவுஜென்ஸ் என்ற காவல்துறை அதிகாரி சாராவை கடத்தி படுகொலை செய்தது தெரியவந்தது.
இந்நிலையில் லண்டனில் உள்ள சாரா நினைவிடத்தில் திரண்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அஞ்சலிக்கு நடுவே சாராவின் மரணத்துக்கு நியாயம் கிடைக்க வேண்டுமென பெண்கள் தங்கள் செல்போனில் ஒளியை ஒளிரவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.