உலகின் மிக உயர்ந்த சிகரமான எவரெஸ்ட் மலையில் ஏற, ஒரு ஆண்டிற்குப் பிறகு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் அங்கு மலை ஏறுபவர்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் வரும் ஏப்ரல் மாதம் முதல் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் எவரெஸ்ட்டில் ஏற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும் தற்போது வரை 300 வெளிநாட்டினர் இதற்கு பதிவு செய்துள்ளதாகவும் இந்த எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.