மெக்சிகோவில் நடைபெற்ற கொலைவெறி தாக்குதலில் பலியான கவுதமாலா நாட்டை சேர்ந்த 16 பேரின் உடல்கள் விமானம் மூலம் அந்நாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.
கடந்த ஜனவரியில் மெக்சிகோ நாட்டின் தாமவுலிப்பாஸ் நகரில், கவுதமாலாவை சேர்ந்த 16 பேரின் உடல்கள் குண்டு துளைக்கப்பட்டு, உடல்பகுதி எரிந்த நிலையில், மீட்கப்பட்டன.
அவை தனித்தனி சவபெட்டிகளில் கவுதமாலா நாட்டு கொடி போர்த்தி விமானம் மூலம் கவுதமாலா சிட்டி வந்தடைந்தது.
இதையொட்டி அங்கு வந்திருந்த அந்நாட்டின் அதிபர், அலெஜாண்டிரோ ஜியாமட்டே, உடல்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தி, இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கலை தெரிவித்தார்