ராணுவ ஆட்சி மற்றும் வன்முறை காரணமாக நாடு திரும்ப முடியாமல் தவிக்கும் மியான்மர் மக்களுக்கு தற்காலிகமாக அடைக்கலம் கொடுக்க தயாராக இருப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்பு துறை செயலாளர் மயோர்காஸ், ‘தற்காலிக பாதுகாக்கப்பட்ட நிலை என்ற முடிவின் கீழ் மியான்மர் நாட்டவர்களுக்கு அடைக்கலம் கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.
அவர்கள் தற்காலிகமாக அமெரிக்காவிலேயே தங்கி இருக்க முடியும்’ என்று அவர் கூறினார். மியான்மர் ராணுவ ஆட்சியாளர்களுக்கு எதிராக பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.