பிரேசிலில் ஒரே நாளில் கொரோனா உயிரிழப்பு இரண்டாயிரத்து 500 ஐக் கடந்துள்ளது. உருமாறிய புதிய கொரோனா வைரஸ் பிரேசிலில் வேகமாகப் பரவி வருகிறது.
நேற்று ஒரே நாளில் 84 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை பிரேசிலில் 2 லட்சத்து 75 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
அதிபர் பொல்சனரோ (Bolsonaro) கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதில் அலட்சியம் காட்டியதன் விளைவாய் உலகளாவிய அளவில் கொரோனா உயிரிழப்புகளில் பிரேசில் இரண்டாம் இடத்தில் உள்ளது.