மியான்மரில் அரசின் ஆலோசகராக இருந்த ஆங் சான் சூ கீ, 4 கோடியே 35 லட்சம் ரூபாய் மற்றும் தங்கத்தை முறைகேடாகப் பெற்றுக்கொண்டதாக ராணுவ ஆட்சியாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
ஆங் சான் சூ கீ 2016ஆம் ஆண்டு முதல் 2021 பிப்ரவரி வரை மியான்மர் அரசின் ஆலோசகராக இருந்தார்.
பிப்ரவரி ஒன்றாம் நாள் மியான்மரில் ஆட்சியாளர்களைப் பதவியிறக்கி வீட்டுக் காவலில் வைத்துவிட்டு ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது.
இந்நிலையில் ஆங் சான் சூ கீ சட்டத்துக்குப் புறம்பாக 4 கோடியே 35 லட்ச ரூபாய் பணம் மற்றும் தங்கத்தைப் பெற்றுள்ளதாக ராணுவ ஆட்சியாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இந்தத் தகவலை விசாரித்து உறுதிப்படுத்தியுள்ளதாகவும், இதேபோல் அமைச்சர்கள் பலரும் ஊழல் செய்துள்ளதாகவும் ராணுவ ஆட்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.