உய்குர் இன முஸ்லீம்களை சீனா இனப்படுகொலை செய்ததாக ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட சிந்தனைக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் இனப்படுகொலை நடத்தப்பட்டுள்ளதாகவும், 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் சட்டவிரோதமாக சிறை வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஜின்ஜியாங் பகுதி தடுப்பு முகாம்களின் தாயகமாக இருப்பதாகவும் அங்கு வைக்கப்பட்டுள்ள முஸ்லீம் பெண்கள் பாலியல் வன்கொடுமை, பொது அவமானத்திற்கு உள்ளாக்கப்படுவதாகவும் அந்த அமைப்பின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள உய்குர் இனமக்களை அழிக்கும் நோக்கத்துடனே சில மையங்கள் செயல்பட்டு வருவதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.