மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான Equatorial Guineaவில் ராணுவ தளம் அருகே நடைபெற்ற அடுத்தடுத்த தொடர் குண்டுவெடிப்பில் 17பேர் உயிரிழந்த தாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் 420க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அந்நாட்டின் முக்கிய நகரமான Bata வில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இந்த சம்பவத்தை அடுத்து அந்த பகுதிக்கு மீட்பு படையினர் விரைந்து சென்று தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.