ஸ்பெயினில், பிரபல ராப் பாடகர் பாப்லோ ஹசெல் கைது செய்யப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் போலீசார் மீது பாட்டில்கள் மற்றும் கற்களை வீசித் தாக்கினர்.
ஸ்பெயின் அரச குடும்பத்தை அவதூறாக விமர்சித்து யூடியூபில் பாடல் வெளியிட்ட பாடகர் பாப்லோ ஹசெலுக்கு 9 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
அவரை விடுவிக்க வலியுறுத்தி ஸ்பெயின் முழுதும் அவரது ரசிகர்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர்.