ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் நடந்த குண்டு வெடிப்பில் 20க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தனர்.
தலைநகர் மெகாடிஷூவில் துறைமுகத்திற்கு அருகில் உள்ள உணவகம் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் இருந்த குண்டு வெடித்துச் சிதறியதில் 30க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
காயமடைந்தவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் கூறியுள்ளன. இந்தத் தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்காத நிலையில் அல்கொய்தாவின் துணை அமைப்பான அல் ஷபாப் நடத்தியிருக்கலாம் என பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.