தாய்லாந்தில் விபத்துக்களில் காயமடைந்து ஊனமுற்ற நாய்களுக்கு அடைகலம் கொடுத்து அதற்கு தினசரி நடை பயிற்சி, பிசியோதெரபி, ஆரோக்கியமான உணவு உள்ளிட்டவற்றை வழங்கி பரிவு காட்டிவருகிறது ஒரு தன்னார்வ அமைப்பு.
சோன்பூரி மாகாணத்தில் அமைக்கப்பட்டுள்ள ஊனமுற்ற நாய்களுக்கான பராமரிப்பு மையம் The Man That Rescues Dogs என்ற அறக்கட்டளையால் 2002 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
இந்த மையத்தில் 600க்கும் மேற்பட்ட நாய்களும் அவற்றை பராமரிக்க 30 ஊழியர்களும் உள்ளனர். ஊனமுற்ற மற்றும் காயமடைந்த நாய்களை தினமும் நடைபயிற்சி அழைத்து செல்லும் பணியாளர்கள், அவை ஓடவும் நடக்கவும் பயிற்சி அளித்துவருகின்றனர்.