அமெரிக்காவில் தமிழ் பெண் எம்.பி. ஒருவர் வணிக மற்றும் நிர்வாக சட்டம் தொடர்பான துணைக்குழுவின் துணைத்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து பேசிய பிரமிளா ஜெயபால், இது தனக்கு கிடைத்துள்ள கவுரவம் என மகிழ்ச்சி பொங்க குறிப்பிட்டார்.
கடந்த 2017ஆம் ஆண்டு முதல் அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபை எம்.பியாக பிரமிளா ஜெயபால் பணியாற்றி வருகிறார். ஜனநாயக கட்சியை சேர்ந்த இவர் சென்னையில் பிறந்த தமிழ் பெண் என்பது குறிப்பிடத்தக்கது.